இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுகுவுக்கு நன்றி சொல்லும் இந்தியர்கள்!

இந்தியா உரத்த சிந்தனை உலகம் லைஃப் ஸ்டைல்

modi nethanyahu - 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு நன்றி சொல்லி வருகின்றனர் இந்தியர்கள்! மேலும், அவரது பேஸ்புக் கருத்துக்கு இந்தியர் அல்லாதவர் டிஸ்லைக் செய்து வரும் போது, இந்தியர்கள் லைக் செய்து வருவதுடன், அதனை பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

காஷ்மீரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் 40 பேருக்காக நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

இந்நிலையில், இந்தியாவின் துயரத்துக்கு தோள் கொடுக்கும் வகையில் உலக நாடுகள் பலவும் தங்களது வருத்தத்தையும் ஆறுதலையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட வகையிலும் ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனிய இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வெகு காலம் பாதிக்கப்பட்டிருந்த இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, இந்திய பிரதமர் மோடிக்கு தெரிவித்துக் கொண்டுள்ள செய்தியில், நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம் என்றும் இந்திய மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அவர் ஆதரவு தெரிவித்திருந்த  பேஸ்புக் பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.