
சாபுதானா புவ்வா
தேவையானவை:
ஜவ்வரிசி, தயிர் (கடைந்தது) – தலா ஒரு கப்,
உருளைக்கிழங்கு, கேரட் – தலா ஒன்று,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
கறிவேப்பிலை, – சிறிது
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள், – 1 டீஸ்பூன்
கடுகு, – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு,
பச்சை மிளகாய் – 4,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதல் நாள் இரவே ஜவ்வரிசியை தயிரில் ஊறவிடவும். உருளைக்கிழங்கு, கேரட்டை பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு… கடுகு தாளித்து, உளுத்தம்ருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த காய்கறிகள், உப்பு, ஊறிய ஜவ்வரிசி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, இறக்கி சூடாக பரிமாறவும்.



