நவராத்திரி ஸ்பெஷல்: சோர்மா லட்டு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
lattu - 2026

சோர்மா லட்டு

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்

சர்க்கரை – 150 கிராம்

உப்பு – சிறிதளவு

ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

பால் – 1/4 கப்

நெய் – 4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

கோவா (சர்க்கரை நீக்கியது) – 100 கிராம்

முந்திரி, பாதாம், கிராம்பு – தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைக் கொட்டி, சிறு தீயில் வறுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்த கோதுமை மாவுடன் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் கொதித்த பால், சிறிதளவு தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவைப்போல் தயார் செய்துகொள்ளவும்.

பின்னர் சப்பாத்திபோல் உருட்டி நான்கு துண்டுகளாக நறுக்கிவைத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுப் பொறித்து, அதை உருளை வடிவத்தில் செய்து அதனுள் கோவா, நெய் மற்றும் பொடியாக நறுக்கிவைத்துள்ள பாதாம், முந்திரி, சிறிதளவு சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து பிடிமானத்துக்காக ரெண்டு கிராம்பு வைத்து மைக்ரோ ஓவனில் வைத்து ஒரு நிமிடம் கழித்து எடுத்தால் சுவையும் சத்தும் நிறைந்த சோர்மா லட்டு ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.