உ.வே.சாமிநாத ஐயர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்தெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐய்யரின் 166-வது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உ.வே.சாமிநாத ஐய்யர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்து தெரியாமல் போயிருக்கும் என்றார்.
உ. வே. சாமிநாதையர் (19/02/1855) பிறந்தநாள்
உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. தமிழ்த் தாத்தா எனப்படுகிறார். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் முதன்மையானவர் உ. வே. சாமிநாத ஐயர். தமது அச்சுப் பதிப்புப் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
ஏட்டுச்சுவடி மீட்பு : பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகளுக்கு நூல் வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழுக்காக தொண்டாற்றி தமிழே தன் மூச்சு என்று வாழ்ந்து உயிர் விட்ட தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் இவருக்கு தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு கூட சிலைகள் கிடையாது. ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவருக்கு தெருக்கள் தோறும் சிலைகள். இதற்குப் பெயர்தான் திருட்டுத் திராவிடம்!