சென்னை நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தமிழகத்தில் மே மாதம் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது. மேலும் இந்த மசோதா தொடர்பாக விவசாய சங்கங்களுடன் இணைந்து அண்ணா ஹசாரே இந்தியா முழுதும் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. 1, 2, 3, 4, 5, 6 என வகைப்படுத்தப்பட்டுள்ள நில வகைகளில் 1, 2, 3 வகை நிலங்கள் விளை நிலங்கள். அவற்றை தொழிற்சாலைகளுக்கு வழங்கக் கூடாது. இந்த நிலம் கையகப் படுத்தல் சட்டம் அது குறித்த தேவைகளுக்கு உடனடியாக சட்டம் இயற்ற தடையாக உள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் விவசாய நிலங்களை தனியார் திட்டங்களுக்கு வழங்க விவசாயிகளின் 80 சதவீத ஒப்புதல் தேவை என கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக இந்த அரசு அந்த நிபந்தனைகளை நீக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற அனைத்துக்கும் விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்காக 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் தேசநலன் கருதி அதில் சில விதிவிலக்குகள் இருந்தன. தற்போது அவற்றில் தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு பொருட்களின் தேவையை சமாளிக்க விவசாய பொருட்களின் உற்பத்தியையும் பெருக்க வேண்டியது அவசியம். எனவே, விளை நிலங்களை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனையும் இச்சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தல் சட்டம் குறித்தும், விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை விவசாயிகளிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் தமிழகத்தில் அண்ணா ஹசாரே இந்த பிரசாரத்தைத் தொடங்க உள்ளார் என்று அவர் கூறினார்.
நிலம் கையகப்படுத்தல் மசோதா எதிர்ப்பில் அண்ணா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari