சென்னை: முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இது மிகவும் ஆச்சரியகரமான விஷயமாகப் பேசப்படுகிறது.
நாளை ராணுவக் கண்காட்சியை பார்வையிட தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் நாளை பிற்பகல் செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இன்று காலை மதிமுக., பொதுச் செயலர் வைகோ, ஹெலிகாப்டரில் பறந்து ஹெலிகாப்டரில் இறங்கி, சாலை வழியாக வர பயப்பட்டுக் கொண்டிருக்கும் கோழை என்று மோடியை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது!