சென்னை: நிஜாம் பாக்கு உரிமையாளருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் உள்ள நிஜாம் பாக்கு உரிமையாளர் சஃபியுல்லா வீட்டில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதேபோல், சென்னை ராயப்பேட்டை வி.எம். தெருவில் அவருக்கு சொந்தமான எஸ்.கே. என்டர்பிரைசஸ் என்ற மற்றொரு நிறுவனத்திலும் சோதனை நடைபெறுகிறது.
சென்னை மட்டுமின்றி மதுரை, புதுக்கோட்டை என பல இடங்களிலும் நடைபெறும் சோதனையில், கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




