புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி! பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் அதிரடி!

Published:

mirage fighter jets - 2026

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது இந்திய ராணுவம்!

இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தகவல் வெளியானது. 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், பயங்கரவாத முகாம்களை அழித்ததாகவும் தகவல் வெளியானது.

பாக்கிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரத்தின் எல்லைக் கோட்டை தாண்டியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முராதாபாத் நகருக்குள் ஊடுருவியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

India strikes back: Mirage jets destroy PoK terror camp with 1,000 kg bombs in pre-dawn strike, sources say

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img