சாரி நோ கமெண்ட்..! இதான் லண்டனில் நிரவ் மோடி கொடுத்த டோட்டல் பேட்டி!

Published:

nirav modi2 - 2026

இந்தியாவின் பெருமளவு நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, இப்போது வெளிநாட்டில் உள்ளார் வைர வியாபாரியான தொழிலதிபர் நிரவ் மோடி! பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் இவரிடம் டெலிகிராஃப் பத்திரிகையாளர் எடுத்த பேட்டியை அது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நிரவ் மோடியின் கெட்டப், லுக் எல்லாம் இப்போது மாறிவிட்டது. தாடி வைத்து அடையாளம் தெரியாத நபரைப் போல் அவர் இருந்தாலும், அவரை அடையாளம் கண்டு கொட்ன டெலிகிராஃப் பத்திரிகையாளர் அவரிடம் பேட்டி கண்டார்.

தற்போது நிரவ் மோடி லண்டனில் வெஸ்ட்என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள மூன்று படுக்கை அறை கொண்ட ஒரு சொகுசுக் குடியிருப்பில் வசிப்பதாக தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அவரிடம் அதன் ஊடகவியலாளர் மிக் பிரவுன் பேட்டி எடுக்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் கேள்விகள் கேட்ட போது, நிரவ் தந்த ஒரே பதில்.. சாரி நோ கமெண்ட்! என்பதுதான்!

nirav modi - 2026

இணையத்தில் வைரலாகி வரும் அவரது பேட்டி…

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

*மிக் பிரவுன்: நீங்கள் அரசிடம் அடைக்கலம்
கோரியுள்ளீர்களா? நான் அதை உறுதிப்படுத்திக்
கொள்ள நினைக்கிறேன்..!

**நிரவ்: சாரி நோ கமென்ட்

  • நீங்கள் பலருக்கு நிறைய கடன் பாக்கி வைத்திருக்கிறீர்கள் இல்லையா?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் எவ்வளவு காலம் இங்கிலாந்தில் தங்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?

** சாரி நோ கமென்ட்

  • நீங்கள் அரசிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நீங்கள் நாடு கடத்தப்படக் கூடிய நபர் என்றும்
    அதிகாரிகள் சொல்கின்றனர். அதுதான் உண்மை என்றால் நீங்கள் தலையசைத்து ஒப்புக் கொள்ள முடியுமா?

** சாரி நோ கமென்ட்

  • எந்தக் கேள்விக்குமே பதில் சொல்ல விரும்பவில்லையா?

** … மௌனமே பதில்….

  • எவ்வளவு நாட்கள் இங்கிலாந்தில் தங்க நினைத்துள்ளீர்கள்?

** மௌனம்…

  • எவ்வளவு நாள் தங்கியிருப்பீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா?

** ,மௌனம்…

  • நீங்கள் (யாரோ ஒருவரின் பெயரைச் சொல்கிறார்… தெளிவாகக் கேட்கவில்லை) அவரின் நண்பரா. அவர் உங்கள் கூட்டாளியா?
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

** சாரி நோ கமென்ட்

  • பதில் சொல்லமுடியாதா

** நோ கமென்ட்

  • நீங்கள் இன்னமும் வைர வியாபாரம் செய்கிறீர்களா? நீங்கள்…..என்ற பெயரில்
    வைர வியாபாரம் செய்கிறீர்களா? அது
    உண்மையா?

** நோ கமென்ட்

அதோடு இந்த பேட்டியை முடித்துக் கொண்டு ஒரு வாடகைக் காரில் ஏறிச் செல்கிறார். நோ கமெண்ட் மட்டுமே சொல்லி ஒரு பேட்டியை அளித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் நிரவ் மோடி. ஆனால், அவரது நிலை என்ன என்பதை நாட்டுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் இந்தக் காணொளி அமைந்திருப்பது மட்டும் உண்மை!

 

Related articles

Recent articles

spot_img