பெரும் உதவி செய்தீர்கள் ஸ்டாலின்: சுப்பிரமணிய சுவாமி கிண்டல்!

இந்தியா சற்றுமுன் தமிழகம்
subramanian swamy - 2026
File Picture

எங்களுக்காக மிகப்பெரிய உதவி செய்த ஸ்டாலினுக்கு நன்றி என்று சுப்பிரமணியன் சுவாமி  கூறியுள்ளார். இன்று திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன் இரண்டாவது கட்டமான ஏப்.18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  அதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் திமுக., அதிமுக., இரு பெரும் கூட்டணிகளை வைத்தே வெற்றி தோல்வி இருப்பதால், இரு அணிகளின் தேர்தல் அறிக்கைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இவற்றில், இன்று திமுக., அதிமுக., இரு கட்சிகளுமே இன்று காலை தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.

திமுக., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ திட்டம் கைவிடப்படுதல். மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வித் துறையை கொண்டுவர நடவடிக்கை, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.  நாட்டுக்கும் ஹிந்துவுக்கும் எதிரான தேர்தல் அறிக்கையை தயார் செய்து திமுக சார்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் எங்களுக்காக மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார்  ஸ்டாலின். அவருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

திமுக., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரு மாநிலக் கட்சியின் அதிகார வரம்புக்குள் வராத அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அது குறித்த விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் உடனே எழுந்தன.

1 thought on “பெரும் உதவி செய்தீர்கள் ஸ்டாலின்: சுப்பிரமணிய சுவாமி கிண்டல்!”

  1. இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான தேர்தல் அறிக்கையை தி.மு.க. வெளியிட்டதால் NDA கூட்டணிக்கு சாதகமான வெற்றி கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.