திமுக.,வுக்கு ஒரு வேண்டுகோள்! பகுத்தறிவாளராக மாற விருப்பம் இல்லியா?!

Published:

cartoon mathi1 - 2026

திமுகவுக்கு ஒரு வேண்டுகோள்!

நாளை நிறைந்த பௌர்ணமி காலை 9.30 முதல் 10 30 வரை நல்ல நேரம்! பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது நம் முன்னோர் பழமொழி. சரியாக இந்த மூன்றும் கூடிவரும் நேரத்தில் நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது 18 நாள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்

இது எதேச்சையாக நடந்த விஷயமாக இருக்கலாம்! ஆனால் தமிழகத்தில் மூடநம்பிக்கைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும் பகுத்தறிவு மேலும் வளர வேண்டும் என்ற ஆவலிலும் திமுக தலைவருக்கு ஒரு வேண்டுகோள் …

இன்னும் தேர்தல் பிரச்சார காலம் 25 நாட்கள் இருக்கிறது! ஒரு நாள் தள்ளி விரைவிலேயே தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம்! இந்த தேர்தலில் (நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம்) திமுக சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் 21ம் தேதியில் இருந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்படி பணிக்கலாம் (கவனிக்க 26 வரை இதற்கு கால அவகாசம் இருக்கிறது!)

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

தமிழர்கள் அனைவருமே பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம்! செய்வீர்களா??? செய்வீர்களா???

இப்படிக்கு,

திருவாளர் பொதுஜனம்

Related articles

Recent articles

spot_img