பாலக்காடு சிபிஎம் அலுவலகத்தில் கம்யூ., இளைஞர் தன்னை கற்பழித்து விட்டதாக கல்லூரி மாணவி புகார்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்

dyfi sfi girl - 2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆபீஸில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேரளாவில் இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தன்னை ஓர் இளைஞர் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்

பாலக்காடு மாவட்டம் செர்ப்புலச்சேரி பகுதியில் சாலை ஓரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அண்மையில் கேட்பாரற்ற நிலையில் கண்டெடுக்கப் பட்டது! அக்குழந்தையை கைப்பற்றிய போலீசார் குழந்தையின் தாயான 21 வயது இளம் பெண்ணை சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் கூறிய போது கல்லூரி மாணவியான தாம் மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தேன்! கல்லூரி ஆண்டு விழா மலர் தயாரிப்பதற்காக செர்ப்புலச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்கு பத்து மாதத்திற்கு முன் சென்றிருந்தேன்

அப்போது அங்கிருந்த எஸ்எப்ஐ இளைஞர் ஒருவர் என்னை பலாத்காரம் செய்தார்! அதில் நான் கர்ப்பமடைந்தேன்! திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் மற்றவர்களுக்கு சந்தேகம் எழும் என்ற அச்சத்தில் அந்த குழந்தையை சாலையோரத்தில் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்

இது குறித்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கட்சித் தலைமை விசாரணை நடத்தி உண்மையை கண்டு பிடிக்கும் என்று கூறினார்

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்! இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில் மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் பலாத்கார மையங்களாக மாறி வருகின்றன! பினராயி விஜயன் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.