ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்! நெகிழ வைத்த நிர்மலா சீதாராமன்!

Published:

nirmala sitharaman in uduppi - 2026

பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நேற்று (மார்ச் 26) காலை உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்னர் மடத்துக்கு தரிசனத்துக்காக சென்றார்.

அங்கே ஸ்ரீகிருஷ்ண மடத்தில் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாஜக வேட்பாளர் உடுப்பி சிக்கமகளூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே மற்றும் உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் கே ரகுபதி பட் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்!

பலிமாரு மடத்தின் தலைவர் பர்யாய சுவாமி வித்யா தீர்த்தர் அவர்களை வரவேற்று பகவத் பிரசாதம் வழங்கினார். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுவாமியிடம் நாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்காகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாம் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், அதற்கு ஆசி அளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்

பிறகு நிர்மலா சீதாராமன் தனக்கும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம், கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயில் ஆகியவற்றுக்குமான பல வருட நெருங்கிய தொடர்பு குறித்து எடுத்துக் கூறினார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

பின்னர் அவர் மணிபாலில் நடைபெறும் மீனவர்கள் உடனான கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கிருந்து சென்றார். பாஜக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

உடுப்பி தொகுதியிலிருந்து போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது நிர்மலா சீதாராமன் உடனிருந்தார்!

உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தபோது நடந்த ஒரு சம்பவம் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது.

நிர்மலா சீதாராமன் வருவதை அறியாமல் இளைஞர் ஒருவர் பகவானை கண் மூடி அருகே நடப்பது கூட அறியாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிர்மலா சீதாராமனுடன் வந்த காவலர்களும் கோயில் அர்ச்சகரும், அந்த இளைஞரை அங்கிருந்து விலக்க விரைந்து சென்றனர்.

ஆனால் அவர்களைத் தடுத்த நிர்மலா சீதாராமன், அவர்களைத் தடுத்து நிறுத்தினார். பின்னர், அந்த இளைஞர் பிரார்த்தனை செய்து அங்கிருந்து அகலும் வரை ஓரிரு நிமிடங்கள் நிர்மலாவும், ஷோபா கராண்டால்ஜேவும் காத்திருந்தனர். அந்த இளைஞர் அங்கிருந்து நகர்ந்ததும், பின்னர் அவர்கள் சந்நிதி முன் நின்று வணங்கிச் சென்றனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இது குறித்த வீடியோ இன்று இணையதளங்களில் வைரலானது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று ஓர் இளைய பக்தருக்காக காத்திருந்த பாதுகாப்பு அமைச்சரின் எளிமையைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img