வாக்குப் பதிவு நாளில் பொது விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

Published:

13 June20 voting - 2026

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று பொது விடுமுறை விடப் படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப். 11ம் தேதி தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப் பதிவில், இரண்டாம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் ஏப். 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்று, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன், காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து தேர்தல் நடைபெறுகிறது.

அன்றைய தினம், தமிழகத்தில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் தங்களது வாக்கை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளதுடன், நூறு சதவீத வாக்குப் பதிவுக்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு! இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்காளா்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு, பொதுவிடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img