கடந்த 1984ம்ஆண்டு தலைநகர் டெல்லியிலும் இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து காங்கிரஸ் சகிப்புத்தன்மை குறித்து பேசுவதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் மாநிலத்திலத்தில் 243சட்ட தொகுதிகளுக்கு 5கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த அக் டோபர் மாதம் 12ம் தேதி துவங்கிய தேர்தல் தற்போது இறுதி கட்ட நிலையை நெருங்கியுள்ளது. 5வது இறுதி கட்ட தேர்தல் வருகிற 5ம் தேதி நடைபெறுகிறது.
4வது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாக இருந்தபோதும் பின்னர் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் 4வது கட்ட வாக்குப்பதிவில் 57 சதவீதம் பதிவாகியுள்ன
இந்த சட்டசபைத்தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து மெகா கூட்டணி போட்டியிடுகிறது இந்த மெகா கூட்டணியில் பீகாரை தற்போது ஆட்சி செய்து வரும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
கடந்த ஆண்டு மக்களவைத்தேர்தல் நடைபெற்ற போது பீகாரில் பிரதமர் மோடி தீவிரப்பிரச்சாரம் செய்தார் . இதனால் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. எனவே தற்போதைய சட்ட சபைத்தேர்தலிலும் மோடியை நம்பி பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கியுள்ளது. மோடியும் அதிக அளவில் பிரச்சாரக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சி சகிப்புத்தன்மை இல்லாத கட்சி என்கிற விதத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன
இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி நேற்று பீகாரில் உள்ள புர்னியாவில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பதிலடி தந்தார். அப்போது அவர் கூறியதாவது, சகிப்புத்தன்மை குறித்து காங்கிரஸ் பேசுகிறது . கடந்த 1984ம்ஆண்டு டெல்லியிலும் இந்தியாவின் இதரப்பகுதிகளிலும் சீக்கியர்கள் லட்சகணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் 2வது 3வது 4வது நாளில் சீக்கியர்கள் அதிக அளவில் கொல்லப்பட்டார்கள்.அதே காங்கிரஸ் கட்சி தற்போது சகிப்புத்தன்மை குறித்து பேசுகிறது.
இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் கண்ணீர் ஈரம் இன்னும் காய வில்லை.அப்போது ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை.பீகார் சட்ட சபைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40இடங்களை ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அளித்துள்ளன., இதற்கு அந்த கட்சிகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
காங்கிரசுக்கு நீங்கள் ஒதுக்கிய இடங்கள் பாஜ கட்சிக்கு கிடைக்கும்.லல்லு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் நீண்ட காலமாக காங்கிரசிற்கு எதிராக போராடியவர்கள் ஆவார்கள். ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக அவர்கள் பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களை ஒதுக்கியுள்ளனர். பீகாரில் காங்கிரஸ் கட்சி என்பதே இல்லை . இந்த நிலையில் 40 இடங்களை காங்கிரசிற்கு அளிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.இந்த இடங்களை நாங்கள்(பா.ஜ.க) எந்த வித சவாலும் இல்லாமல் எளிதாக வெற்றி பெறுவோம்.. பீகார் மக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய பிரதமர் வாஜ்பாயின் ஆசிர்வாதத்தால் நிதிஷ் குமார் பீகார் மாநில அரசியலில் உயர்வு பெற்றார்.எனவே அப்போது பீகார் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.மாநிலத்தில் காட்டாட்சியை அகற்ற வேண்டும் என்று நிதிஷ் குமாருக்கு வாக்களித்தனர். தற்போது வாஜ்பாயின் ஆசிர்வாதம் நிதிஷ் குமாருக்கு இல்லை. எனவே மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள். பீகாருக்கு நான் வருகை தந்துள்ளதையொட்டி மெகா கூட்டணி தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சகிப்புத்தன்மை இல்லை என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டது. இந்த நிலையில் பிரதமர்மோடி காங்கிரசின் சகிப்புத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.



