எல்லாமே பொய்.. எல்லாமே பொய்! ரஜினியை சாடும் மன்ற நிர்வாகி!

Published:

rajini
rajini

ரஜினிகாந்த் உடல் நிலை சரி இல்லை என்று பொய் சொல்லி மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் ஆர்.எஸ். ராஜன் விமர்சித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற குமரி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் உள்ளிட்டோர் மன்றத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜன் ரஜினிகாந்த் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.

அதில், ரஜினி தன்னை மட்டும் ஏமாற்றவில்லை, ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ள அவர், எந்திரன் படத்தை 800 கோடி ரூபாய்க்கு விற்க தான் அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்தார் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் .

அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் உடல் நிலை சரி இல்லை என்று பொய் சொல்லி நடித்து மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என்றும் ராஜன் விமர்சித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரஜினிகாந்த் பெயரில் ரூ.13 லட்சத்திற்கு நற்பணிகள் செய்துள்ளதாகவும், அதனால் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு நிர்வாகியான சதீஷ்பாபு, உரிய விளக்கம் அளிக்காவிட்டால் ராகவேந்திரா மண்டபத்தில் தீக்குளிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img