அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் பயிர்இன்சூரன்ஸ்
உடன் வழங்ககோரி விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
ஆவுடையார்கோயில் தாலுகாவில் பல கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து
பாதிக்கப்பட்டதற்கு இன்சூரன்ஸ் தொகை பிரிமியம் செலுத்தி இருந்தனர் இந்நிலையில்
அனைவருக்கும் இதுவரை வராத நிலையில் சில கிராமங்களுக்கு கூடுதலாகவும் சில
கிராமங்களுக்கு குறைவாகவும் காப்பீடு தொகை கணக்கீடு செய்துள்ளதாக தகவல் வந்தது
மேலும் ஆவுடையார்கோயில் தாலுகாவில்
அதவத்துார்,களபம்,கோவனிக்கிடங்கு,கோதமங்களம்,அரசூர்,பூவாரனேந்தல் ஆகிய
கிராமங்களுக்கு இதுவரை இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படவில்லை.இந்நிலையில்
ஆவுடையார்கோயிலில் தெற்கு வெள்ளாறு நீர்பாசன சங்க தலைவர் துரைமாணிக்கம்
தலைமையில் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அவை தலைவர் பொன்துரை,விவசாயஅணி
சுந்தரபாண்டியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்தில்
அனைவருக்கும் உடனடியாக இன்சூரன்ஸ் தொகையைஅரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை
விடுத்துள்ளனர் ஆர்பாபட்டத்தில் காங்கிரஸ் செல்வரத்தினம்,முத்து,மா கம்யூ
சுப்ரமணியன்,சண்முகநாதன்,வீரையா,குப்புச்சாமி,கோவிந்தராசு,குப்புராஜா,முத்தமிழரசன்,சேவுகப்பெருமாள்,சங்கிலிமுத்துகருப்பையா,செல்லத்துரை,துாயவன்,காளிமுத்து,மாணிக்கம்,கோபாலகிருஷ்ணன்,பாண்டியன்,காளிமு்த்து
உட்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள்பங்கேற்றனர்.
ஆவுடையார்கோயிலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்.
Popular Categories




