அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு தவுகீத் ஜமாத் சார்பில்
மியான்மார் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதுபாருக் தலைமை வகித்தார்.மாநில செயலாளர்
சுலைமான் ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது ரோகிங்யா(பர்மா) பகுதியில் 3
லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம்கள் அகதியாக உள்ளதாகவும்,பல ஆயிரம் பேர்
இறந்துள்ளதாகவும் இந்த பிரச்னை தொடர்பாக உலக நாடுகளும் ஐநா சபையும்
தடுக்கவேண்டும் என்றும் மத்திய அரசு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும்
பேசினர்.




