சென்னை:
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் விளக்கம் கேட்டும் கொடுக்காத நிலையில், கெடு முடிந்ததால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டப் பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருள்களை கொண்டு வந்ததாகக் கூறி, திமுக., உறுப்பினர்கள் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப் படுமெனத் தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் மீது இதே போன்ற நடவடிக்கை பாயுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, 18 எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை
மேற்கொண்டிருக்கிறார்.
அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.



