ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு!

ravindranath ops

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் பழனிசாமி இன்று டில்லி சென்றார்.

மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற மோடி, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரும் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோர் பிரதமர் அலுவலகம் விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டனர்.

இந்நிலையில் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை, தில்லி சென்றார்.

இதனிடையே, தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. அதிமுக சார்பில் யார் அமைச்சராவார் என கேள்வி எழும்பிய நிலையில் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Comments

One response to “ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு!”

  1. அப்பாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகனுக்கும் இருக்க வாய்ப்பு உள்ளது. உண்மையிலேயே மச்சக்காரர் தான் என்பது விரைவில் தெரிந்து விடும். எல்லா தொகுதிகளும் தமிழ்நாட்டில் திமுகவிற்கு என்றாகிவிட்டபின், ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு என்று அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. அதுவும் துணை முதல்வர் திரு ஓபிஎஸ் அவர்களின் புதல்வர் திரு ரவீந்திரநாத் குமார் அவர்களுக்கு. இதற்காகத்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து திரு மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவுக்கான அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. எம்.பி யாக செல்பவர் மந்திரியாக திரும்புவாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.