நீர்மூழ்கி கப்பல்களைத் தாக்கி அழிக்கும் நுட்பம்! இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

10 July20 India america - 2026

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர் இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டு எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வேற்று நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் திட்டத்தின் கீழ், 24 என்ற எண்ணிக்கையிலான எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை  17 ஆயிரத்து 832 கோடி ரூபாய்க்கு கொடுக்க அமெரிக்கா வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஹெலிகாப்டர்களால், எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து பின் தொடந்து தாக்க முடியும்.

எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களில், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஹெல் ஃபைர் (Hellfire) ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே. 54 ரக நீர்மூழ்கி குண்டுகள் ஆகிய ஆயுதங்கள் இருக்கும்.

இந்தத் தகவலை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைப்பு கூறியுள்ளது.!

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.