சசிகலா சிறையில் செய்ததை தோலுரிச்சாங்க…! சப்பாத்தில செய்யிறத தோலுரிக்கிறாங்க! ரூபா…!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

roopa ips - 2026

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்து கவர முற்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறது.

விடிய விடிய வாகன சோதனை செய்தும் ரோட்டில் காத்து கிடந்தும் பல வகைகளில் யோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தை விட பல மடங்கு அரசியல்வாதிகள் பலமாக யோசித்து வருகின்றனர்.

பணம் மற்றும் பரிசுப் பொருட்களை இப்படித்தான் என்று அனுமானிக்க இயலாத வழிகளில் எல்லாம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.

அவ்வகையில், இப்போது சமூக வலைத்தளம் மூலம் பரவும் ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவை கர்நாடக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், சப்பாத்தி மாவை உருட்டும் பெண் ஒருவர், அதற்குள் ரூபாய் நோட்டை வைத்து உருட்டி சப்பாத்தி செய்கிறார்.

பின்னர் சுட்டு வேக வைத்த அந்த சப்பாத்தியை பிரித்து பார்த்தால், ரூபாய் நோட்டு எந்தவித சேதமும் இற்றி இருக்கிறது. ஒரு அதிசயம் சப்பாத்தி உள்ளே வைக்கும் போது அது 500 ரூபாய் பச்சைத் தாளாகவும் சப்பாத்தி சுடப்பட்டு பிரிக்கும்போது 2000 ரூபாய் ரோஸ் கலர் தாள் ஆகவும் இருக்கிறது

dig roopa chappathi - 2026

இதனை சுட்டிக்காட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா, இதுபோன்று நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வழி இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இவர்தான் சசிகலா சிறையில் சொகுசாக இருந்ததை அம்பலப் படுத்தினார்..

பின்குறிப்பு:  ரூபா ஐபிஎஸ் இந்த தகவலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த தேதி ஏப்ரல் 1

3 thoughts on “சசிகலா சிறையில் செய்ததை தோலுரிச்சாங்க…! சப்பாத்தில செய்யிறத தோலுரிக்கிறாங்க! ரூபா…!”

  1. சப்பாத்திக்குள் வைக்கும்போது ஐந்நூறு ரூபாயாகவும் சப்பாத்தியை பிரித்தால் இரண்டாயிரம் ரூபாயாகவும் வருகிறதாம். எப்படி? கண்டிப்பாக மாஜிக் இல்லை. செய்தியும் உண்மையாக இருக்க mudiyathu.

  2. சப்பாத்திக்குள் வைக்கும்போது ஐந்நூறு ரூபாயாகவும் சப்பாத்தியை பிரித்தால் இரண்டாயிரம் ரூபாயாகவும் வருகிறதாம். எப்படி? கண்டிப்பாக மாஜிக் இல்லை. செய்தியும் உண்மையாக இருக்க mudiyathu.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.