கின்னஸ் சாதனை படைக்கும் நிஜாமாபாத் தொகுதி! 185 வேட்பாளர்களுடன் திணறும் ஈவிஎம்.,கள்!

Published:

nizamabad constituency evm - 2026

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் 185 வாக்காளர்கள் உடன் நோட்டாவும் சேர்ந்து 186 சின்னங்கள் கொண்ட ஈவிஎம் மெஷின் வாக்குப்பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன

இந்த வாக்கு அளிக்கும் இயந்திரங்கள் தொகுப்பு, ஒவ்வொரு தொகுதியிலும் 12 பெட்டிகளாக அமைக்கப்பட்டுள்ளன ஒரு வாக்குப் பெட்டியில் 15 பேர் என 12 வாக்குப் பெட்டியில் சேர்ந்து 180க்கும் அதிகமானோர் வாக்களிக்க சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன~ இவை அனைத்தும் வரிசையாக இடதும் வலதுமாய் ஆறு ஆறு தொகுதிகளாக வைக்கப்படும்

வாக்காளர்கள் எளிதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வாக்குச்சாவடிக்கு வெளியில் இந்த 186 பேருக்குமான பெயர்கள் சின்னம் ஆகியவை விரிவாக ஒட்டப்பட்டிருக்கும்.

இந்தத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இங்கே வாக்குப்பதிவு நடைபெறுகிறது இதற்காக தேர்தல் அதிகாரிகள் அலுவலர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர்.

பி இ எல் (பெங்களூர்) நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் நம்மிடம் இந்தப் பணி குறித்து தெரிவித்த போது… இது நிச்சயம் கின்னஸ் உலக சாதனையை படைக்கும்! இந்த வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் மூன்று நாள்கள் 24 மணி நேரமும் வேலை செய்துள்ளோம். தேர்தல் அதிகாரிகள் 185 வாக்காளர்களின் பெயர்களையும் அவர்களுக்கான சின்னங்களையும் இடம்பெறச் செய்து வரிசைப்படுத்தி அவற்றை வாக்களிக்கும் இயந்திரங்களில் அமைத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரமே தூங்க நேரம் கிடைத்தது. கடைசி ஐந்து நாட்களில் இந்த தொகுதிக்கான இயந்திரங்களை முழுமையாகத் தயார் செய்து, மிகவும் சிரமப் பட்டுள்ளோம்… என்றார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மேலும், பெங்களூரில் இருந்து இதற்காக இசிஐஎல் மற்றும் பி இ எல் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் நிஜாமாபாத் வந்திருந்தோம். நிஜாமாபாத் தொகுதியின் வாக்குப் பெட்டிகளை தயார் செய்வதற்கான பணியில் 575 பொறியாளர்கள் இரவு பகலாக பாடுபட்டனர். இது தேர்தல் வரலாற்றில் இல்லாத மாபெரும் அயராத பணி! ஆறு நாள்கள் இதற்காக உழைத்து, பின்னரே பெங்களூரு திரும்ப முடிந்தது” என்று அவர் தமது அனுபவங்களை நம்மிடம் தெரிவித்தார்!

கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 11 அன்று நடைபெறுகிறது. நோட்டா உடன் சேர்த்து 186 சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன~ 185 பேருக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது! இதில் எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் இவிஎம்மில் 12m3 என்ற வெர்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது!

nizamabad constituency - 2026

இந்த தொகுதியின் பிரசாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர் செவ்வாய்க்கிழமை இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறும் நிலையில் அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் பிளக்ஸ் போர்டில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் 186 பேருக்குமான பெயர் சின்னம் புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளன! நிஜமாபாத்தில் உள்ள எஸ்எஃப்எஸ் உயர்நிலைப்பள்ளியில் மாடல் போலிங் ஸ்டேஷன் அதாவது மாதிரி வாக்கு மையம் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு இந்த புதிய இவிஎம் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினில் எப்படி வாக்களிப்பது; வேட்பாளருக்கான பட்டனை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது!

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்த இயந்திரத்தில் முறைகேடான அளவில் வாக்களிக்க இயலாது என்பது குறித்து வாக்காளர்களுக்கு செய்து காட்டப்பட்டது சாதாரணமாக வாக்களிக்கும் நேரம் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இருக்கும். வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நிலையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தகுந்த நேரம் கொடுத்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தற்போது வேண்டுகோள் விடுக்க தொடங்கியுள்ளனர்

நிஜாமாபாத் தொகுதியில் உள்ள விஜயலட்சுமி கார்டன், பாரதி கார்டன், சுகுணா கார்டன் ஆகிய இடங்களில் வாக்களிப்புக்கு முந்தைய ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. நிசாமாபாத் மக்களவை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் எம் ராம மோகன ராவ் இது குறித்து கூறிய போது ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த வாக்களிப்பு குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி மற்றும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கவனமுடன் பணியாற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்!

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img