ரேபரேலியில் சோனியா காந்தி இன்று மறுதினம் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று நடைபெற உள்ள ஊர்வலம் கெளரிகஞ்ச் பகுதியில் இருந்து தொடங்கி, அமேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைகிறது. அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக ராகுல் காந்தி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்நிலையில்,அதே மாநிலத்தில் காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி இன்று மறுதினம் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.



