புது தில்லி: நேபாளத்தை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகு நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது. இதுகுறித்து நேபாளத் தூதரகத்தின் துணைத்தூதர் கிருஷ்ண பிரசாத் தாகல் தெரிவித்தபோது, நேபாளத்தில் மிகப் பெரும் அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் எங்களுக்கு வந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதித்துள்ளது என்றார்.

