இந்தியாவின் உடனடி உதவி: நேபாளத் தூதர் உருக்கம்

உலகம்

deep-upadayayaநேபாளத்தில் இன்று முற்பகல் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தொடர்ந்து 4 முறை நிலம் அதிர்ந்தது. இதனால் நேபாளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. கட்டடங்கள் பல இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு சுமார் 100 பேர்வரை பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நேபாளத்துக்கு தனது உடனடி உதவிக் கரத்தை இந்தியா நீட்டியுள்ளது பிரதமர் மோடி, உடனடியாகத் தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை செய்வதாக்க் கூறி செயலில் இறங்கினார். இதனிடையே, தாங்கள் இந்தியாவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் உடனடி உதவிக்கு நன்றி கூறுவதாகவும் இந்தியாவுக்கான நேபாள தூதர் தீப் உபாத்யாய கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துடிப்பான செயல்பாடுகள் நேபாளத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகக் கூறினார். அவர் மேலும், நேபாளத்துக்கு மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவ அவசர சிகிச்சை அமைப்புகள் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை உடனே அனுப்பி வைக்க உதவுமாறும் இந்தியாவைக் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.