நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து காத்மாண்டு விமான நிலையத்துக்கு வர வேண்டிய, செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நேபாளத்தில் இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 அலகு ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து, பின்னர் 7.0 என்ற அளவிலும், அதன் பின்னரும் தொடர்ந்து மூன்று முறையும் நில அதிர்வு ஏற்பட்டதாக, நேபாள அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து செல்ல வேண்டிய மற்றும் காத்மாண்டு விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

