டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

tik tok douyin taking the world bytedance feature image 1 - 2026

புது தில்லி : ‘டிக் டாக்’ செயலிக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் ‘டாக் டாக்’ செயலிக்கு தடை விதித்தது. மொபைல் போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் வழியை தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் விதித்த இந்தத் தடையை நீக்குமாறு சீன நிறுவனமான ‘டிக் டாக்’ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது
.
அதில், டிக் டாக் செயலிக்கு உயர் நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாளை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.