தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை ஜோடிக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம்!

Published:

ranjan gogoi - 2026

“தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எனக்கு பணம் தர முன்வந்தார்கள். அதற்கு பிரஸ் கவுன்சிலில் மட்டும் ஊடகங்களை கூட்டி பேச அழைத்தார்கள். நான் உடன்பட மறுத்துவிட்டேன்” – அசாராம் பாபு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உத்சவ்.

தலைமை நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ராஜினாமா செய்ய வைக்க இந்த முயற்சி என்கிறார் உத்சவ்.

“20 வருடங்களாக நேர்மையாக பணிபுரிந்து வெறும் 6,20,000 வங்கியில் வைத்திருக்கும் என்னை ஊடகங்கள் (கேரவன், ஸ்க்ரோல், தி வயர்…) இப்படி அவமானப்படுத்துவது முறையல்ல” என்று புலம்பியிருக்கிறார் தலைமை நீதிபதி கொகோய்.

இந்த விவகாரத்தின் பின்புலமாக இருந்து செயல்படுவது பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட தீவிரவாத ஆதரவு – ஹிந்து விரோத – முற்போக்கு வழக்கறிஞர்கள்.

இவர்களை இயக்குவது காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள்.

காரணம்: வரும் வாரங்களில் இறுதி விசாரணையை எதிர்கொள்ளும் நேஷனல் ஹெரால்டு, சோனியா – ராகுல் வருமான வரி வழக்குகள்! இவற்றிலிருந்து அவர்கள் தப்புவது கடினம். நேற்று ராகுலின் இங்கிலாந்து பிரஜை சர்ச்சையும் நீதிமன்றம் செல்லும். காங்கிரஸ் டைனஸ்டி பெரும் ஆபத்தில் உள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

எந்த மோடியை வசைபாடினார்களோ அதே மோடிதான் இன்று நீதித்துறைக்கு பக்கபலமாக இருக்கிறது – அட்டர்னி ஜெனரலும் சோலிசிட்டர் ஜெனரலும் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

இம்மாதிரி குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் வருவதால், அவற்றை விசாரிக்க வழிமுறை கொண்டுவர வேண்டும் அரசும் நீதிமன்றங்களும். “நான் குற்றமற்றவன்” என்று சொல்லி தப்ப முடியாது.

வழக்கறிஞர் உத்சவின் இந்த முகநூல் பதிவை ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்வது உத்தமம்.

  • பாமரன்

Related articles

Recent articles

spot_img