ஆட்சி அமைப்போம் என்ற நிலையில் இருந்து பாஜக., ஓட்டுகளைப் பிரிப்போம் என்ற அளவுக்கு வந்துவிட்டார்கள்!

Published:

modi in kashi - 2026

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி, ஊழல் கூட்டணியாகி விட்டது என்று கூறிய பிரதமர் மோடி, ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், இப்போது பாஜக.,வின் ஓட்டுகளைப் பிரிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸை விமர்சனம் செய்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்தியில் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே நிலையான நல்லாட்சியை தரமுடியும் என்றார். எதிர்க் கட்சிகள் அமைத்துள்ள மகா கூட்டணி, ஊழல் கூட்டணியாக மாறி உள்ளது என்று பேசிய அவர், மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று கூறிய காங்கிரஸ் இப்போது பாஜகவின் ஓட்டுகளைப் பிரிப்போம் என்ற நிலைக்கு இறங்கி விட்டது என்று விமர்சனம் செய்தார்.

ஊழல் கறை படியாதவர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜீவ் காந்தி, போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார் என்று கூறிய மோடி, தங்களால் மட்டுமே ஊழலற்ற நல்லாட்சியை தர முடியும் என்றார். அப்போது கூட்டத்தினர் மீண்டும் மோடி ஆட்சி என கோஷமிட்டனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img