ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை குறித்த மனு! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Published:

rahul gandhi - 2026

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியர் தான் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், அவரது இங்கிலாந்து குடியுரிமை குறித்த மனுவை தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியர் தான் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், காகிதங்களை அடிப்படையாகக் கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.

ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தி இந்தியர் இல்லை என்று கூறுவதற்கு அடிப்படை முகாந்திரமே இல்லை என்று கூறியது.

​முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், ஒரு கம்பெனியின் பங்குதாரர் என்ற அடிப்படையில் அவரது முகவரி, நாடு குடியுரிமை இவற்றில், பிரிட்டன் முகவரியும் குடியுரிமையும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அவரது குடியுரிமை குறித்து பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இரட்டைக் குரியுரிமை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதை அடுத்து இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது .

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Related articles

Recent articles

spot_img