1 1 - 2026

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்ச்சைக்குரிய நிலம், யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண, உச்ச நீதிமன்றம் முடிவுசெய்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி, இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்த குழுவை அமைத்தது. மத்தியஸ்த குழு, 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், மத்தியஸ்த குழுவினர், தங்களின் இடைக்கால அறிக்கையை, சீலிட்ட கவரில் வைத்து, உச்சநீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது.

812316 sc 021518 - 2026

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று மத்தியஸ்த குழு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending