தோப்பில் முகமது மீரான் காலமானார்!
……………………………………………………………..
தோப்பில் முகமது மீரான் அதிரப் பேசாதவர். அவரது முக பாவனைகள் குழந்தைமையோடு இருக்கும், வஞ்சகமற்ற வெள்ளை மனத்தின் பிரதிபலிப்பை அவரது கள்ளம் கபடில்லாத சிரிப்பில் காணலாம்.
அவர் பிறந்த சமுதாயத்தை விமர்சித்தும் நிறைய எழுதினார். அவரது மொழிநடை ஜாலக்குகள் அற்றதாய் மண்ணின் நேரடி மணத்தோடு அமைந்தது.
மொழிப் பயிற்சியில் அவர் அதிக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் தனக்குத் தெரிந்த மொழியில் தன் எண்ணங்களை இலக்கியமாக்கும் வித்தை அவருக்குக் கைகூடியிருந்தது.
விமர்சகர்கள் தம் எழுத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு அவரிடம் எப்போதும் இருந்தது. தமிழில் அதிகம் பரி்சயமாகாத புதிய களத்தை அவர் அறிமுகப் படுத்தினார். அந்த வகையில் என்றும் புறக்கணிக்கப் பட முடியாத எழுத்து அவருடையது.
அவருடன் நான் பேசி மகிழ்ந்த காலங்கள் இனி என் நினைவில் மட்டுமே
~ திருப்பூர் கிருஷ்ணன்



