7 டீம் அட்சிக்கிறாங்க… பைனல்ஸ்ல தோனிகிட்ட மோதுறது யாருன்னு முடிவு செய்ய !

ipl csk - 2026

இந்த வருட ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. வழக்கம் போல் சென்னை அணி இந்த முறையும் பைனல்ஸுக்கு வந்துவிட்டது. கொஞ்சம் சுற்றி வந்தாலும் இலக்கை அடைந்துவிட்டது. வழக்கம் போல் ஐபிஎல் நாடகத்தில் ஒரு சிறப்பம்சம் மற்றும் சுவாரஸ்யம், எட்டு அணிகள் கொண்ட ஐபிஎல்.,லில், 7 அணிகள் தங்களுக்குள் விளையாடி யார் முன்னேறுவது என்று கணக்கு போட்டு, கடைசியில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தல தோனியுடன் மோதுவது யாரு என்று தீர்மானிப்பதற்குத்தான்!

ஐபிஎல் 12 லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குவாலிபயர்-2’ போட்டியில் சென்னை, தில்லி அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல், அரங்கில் 10வது ஆண்டில் பங்கேற்கும் சென்னை அணி, 8வது முறையாக ஃபைனலில் முன்னேறியது.

தவிர, ஐபிஎல்., அரங்கில் சென்னை அணி, தனது 100வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின் ஐபிஎல்., அரங்கில் 100 வெற்றிகளை பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

தவிர, மும்பை அணியை சென்னை அணி நான்காவது முறையாக ஃபைனலில் எதிர்கொள்கிறது. அதில் சென்னை அணி (2010) ஒரு முறையும், மும்பை அணி (2013, 2015) இரு முறை கோப்பை வென்றுள்ளது. சென்னை அணி 8வது ஃபைனலில் பங்கேற்கிறது. மும்பை அணி 5வது ஃபைனலில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா 3 முறை கோப்பை வென்றுள்ளது .

விசாகப் பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ‘குவாலிஃபயர்-2’ போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்., அரங்கில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தது ஒரு சிறப்பான அம்சம்தான்!

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர் நடக்கிறது. இது ஐபிஎல்லின் 12வது தொடர்!

விசாகப் பட்டினம் வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது ஆண்டில் 8வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறியது. வரும் 12ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் ஃபைனலில் சென்னை அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

கடைசி போட்டி வெற்றி குறித்து தோனி கூறிய போது… ‘கொஞ்சம் சுத்தான பாதையில் சென்றாலும், வழக்கமான பாதையான ஃபைனலுக்கு சென்றதில் மகிழ்ச்சி. இதற்கு பௌலர்கள் தான் முக்கிய காரணம். ஒரு கேப்டனாக என்ன தேவை என்பதை மட்டுமே பௌலர்களிடம் கேட்க முடியும். ஆனால் அதை சிறப்பாக செயல்படுத்துவது பௌலர்கள் தான். அதை சிறப்பாக அவர்கள் செய்தனர்.’ என்று கருத்து தெரிவித்துள்ளார் தோனி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories