மீண்டும் சீண்டும் அமேசான்! இந்துக் கடவுள்களை அவமதிப்பதால் புறக்கணிக்க வேண்டுகோள்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

amazon boycot - 2026

இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, இந்துக் கடவுள்களின் உருவங்களை கேவலப் படுத்தி பொருள்களை விற்பனை செய்யும் அமேசான் மீது பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பொருட்களை விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம், மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பன்நாட்டு இணைய வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ இணையதளத்தில் அண்மையில் விநாயகர் உள்ளிட்ட இந்து மத கடவுள்களின் ஸ்டிக்கர்களை டாய்லட் பேப்பர்கள், டாய்லட் மூடிகள், கால்மிதிகள் ஆகியவற்றில் ஒட்டி விற்பனைக்கென புகைப்படத்துடன் வெளியிட்டது.

இது குறித்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்துக்கள் இதற்காக அந்நிறுவனத்தின் மீது புகார்கள் கூறினர். நொய்டாவைச் சேர்ந்த விகாஸ் மிஷ்ரா என்பவர் அமேசான் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அமேசான் நிறுவனம் மீது மத உணர்வை புண்படுத்துவது தொடர்பான பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அமேசான் நிறுவனத்தை கண்டித்து #BoycottAmazon எனும் ஹாஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.