தேர்தல் பிரசாரம் ஒரு புனித யாத்திரை போல் இருந்தது: பிரதமர் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi amitsha ministers - 2026

மக்களவை தேர்தல் பிரச்சாரம் எனக்கு ஒரு புனித யாத்திரையை போல அமைந்து விட்டது என்று மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது! வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அவை அனைத்திலுமே பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தன.

இந்நிலையில் தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி. இதில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டனர்

bjp amitsha dinner1 - 2026

அப்போது அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி,  நான் பல தேர்தல்களை சந்தித்து உள்ளேன். ஆனால் இந்தத் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அமைந்து விட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக நான் மேற்கொண்ட பிரசாரம் ஒரு புனித யாத்திரையை போல எனக்கு அமைந்து விட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றிய அமைச்சர் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் பிரதமர் மோடி!bjp amitsha dinner4 - 2026

இதன் பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று விருந்து அளித்து கௌரவித்தார்.bjp amitsha dinner2 - 2026

அந்த விருந்தில் பாஜக தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.bjp amitsha dinner3 - 2026

இதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மோடி அரசில் இடம் பெற்ற அமைச்சர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக உழைத்து பல சாதனைகளை செய்துள்ளனர், புதிய இந்தியாவை உருவாக்கும் இந்த முயற்சி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் தொடரும் என்று கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.