ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கடிதம்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

edappadi gives petition tomodi - 2026

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப் பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகத்தொடங்கின. அது போல் வெற்றி பெற்றவர்கள் நிலவரங்களும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேஜகூ. 350-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. எனவே பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ” இந்த இமாலய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது முறையாக உங்களுக்கு வாய்ப்பளித்து இந்நாட்டு மக்கள் கௌரப்படுத்தியிருக்கிறார்கள். உங்கள் தலைமையில் இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “பிரமிக்கத்தக்க செயல்பாடு மூலம் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.