காசியின் ஆசி! வாராணசியில் வாழ்த்து! தேர்தலில் வேதியியலிடம் தோல்வி கண்டது கணிதம்: மோதி!

Published:

modi vaaranasi - 2026

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மறுபடியும் அபார வெற்றி பெற்றுள்ள மோதி,  திங்கள் கிழமை இன்று, வாராணசியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அவர் தனது உரையை ‘ஹர ஹர மகாதேவ’ என்று தொடங்கினார்.  அதன் பின்னர் தொடர்ந்து அங்கு பேசியவை:

என்னை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேருக்கும் முதலில் நன்றி. வாராணசி மக்கள் ஒவ்வொருவரும் எனது வெற்றிக்காக போரிட்டார்கள். காசி வந்தாலே நான் புதிய சக்தி பெற்றதாக உணர்கிறேன். என் மனம் அமைதி பெறுகிறது. எந்த வேட்பாளரும் தேர்தல் முடிவுக்கு முன்னர் மன நிம்மதியுடன் இருக்க மாட்டார்கள். ஆனால், நான் மிகுந்த மன நிம்மதியுடன் கேதார்நாத், பத்ரிநாத் புனிதப்பயணம் சென்றேன். இருப்பினும், காசி மக்களின் அன்பு எனக்கு வெற்றியை அளித்துள்ளது.

நான் முதலில் பாஜக தொண்டன்! அதன் பின்னரே இந்த நாட்டின் பிரதமர்! இந்தியாவின் அரசியல் திசையை உத்தரப் பிரதேச மாநிலம் தீர்மானித்துள்ளது. இந்த நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது. இதன் ஏழை எளிய மக்கள் எதிர்காலத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

மாபெரும் அரசியல் பண்டிதர்களுக்குக் கூட தேர்தலில் கள நிலவரம் தெரியவில்லை. அந்தப் பண்டிதர்களுக்கு ஏழை மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுத்தார்கள். கடந்த 2014 தேர்தல், 2017 உத்தர பிரதேச தேர்தல், தற்போதைய 2019 தேர்தல் இவற்றில் அரசியல் கணக்கீடுகள் வெற்றிபெறவில்லை. மாறாக, மக்களின் உணர்வுகளே வெற்றி பெற்றன.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மக்களவைத் தேர்தலில் கணிதம் வேதியியலிடம் தோல்வி கண்டிருக்கிறது.  அரசியல் கணக்குகளைக் கடந்து, மக்களை ஈர்த்த கெமிஸ்ட்ரியை அரசியல் வல்லுநர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். வேதியியல் கணிதத்தை தோற்கடித்திருந்தாலும், கடின உழைப்பு என்பதற்கு மாற்றோ ஈடு இணையோ இல்லை. கடின உழைப்பும் தொலைநோக்கு பார்வையும் எத்தகைய அபிப்ராயத்தையும் மாற்றும் வல்லமை கொண்டவை!

கடந்த 70 ஆண்டுகளாகவே இந்த நாட்டில் தவறான பிரசாரம்தான் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்மறையான பிரசாரத்தையே இதுவரை செய்து வந்துள்ளார்கள். ஆனால், அதனை நாம் வெளிப்படைத்தன்மை, கடின உழைப்பு ஆகியவற்றால் முறியடித்தோம். கடின உழைப்பிற்கும் வெளிப்படைத் தன்மைக்கும் ஈடு இணையில்லை.

அரசு கொள்கைகளை உருவாக்கும். அமைப்பு தான் போர்த்திட்டங்களை வகுக்கும்.  உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை 3 வது இடத்திற்கு எடுத்துச்செல்வது தான் நமது லட்சியம்

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பையும் வலுப்படுத்தியிருக்கிறது. வாராணசி தொகுதியில் தேர்தலின்போது தாங்களே மோடியாக மாறி சுழன்று சுழன்று பணியாற்றிய அனைவருக்கும் நன்றி! இந்த வெற்றி எனக்கு நிகரற்ற வலிமையை தந்துள்ளது. வாராணசி மக்களின் மீது முழு நம்பிக்கை வைத்து போட்டியிட்டேன்.

சில அரசியல் மேதாவிகள் பாஜகவை இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள கட்சி என்று கூறுகின்றனர். கர்நாடகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வென்றிருக்கிறோம். கோவா, அசாமில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள், லடாக் என பல பகுதிகளில் பாஜக வென்றுள்ளது.. இதன் பிறகும் பாஜக இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள கட்சிதான் என்று கூறுவார்களா?

காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல வெட்கக்கேடானது! அரசியல் தீண்டாமை மற்றும் அரசியல் வன்முறை என இரட்டை சவால்களை எப்போதும் எதிர்கொண்டு வந்துள்ள பாஜக, அதிகாரத்தில் இருக்கும்போதும் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கிறது.

அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அடிமட்டத்தில் தொண்டர்கள் ஆற்றிய பணியே மக்களவை தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! தொண்டர்களும் அவர்களது தொண்டும் அற்புதங்களை செய்யும்! நாட்டுக்கு நான் பிரதமர் என்றாலும் வாராணசி தொகுதிக்கு நான் எம்.பி.! நான் அவர்களின் சேவகன் – என்று பேசினார் மோதி.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

Related articles

Recent articles

spot_img