ஜூலை 5ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

Published:

prakash javadekar - 2026

பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அமைச்சரவையில் எடுக்கப் பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூன் 17-ம் தேதி புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள்.

ஜூன் 19-ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஜூன் 20-ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.

ஜூலை 4-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

ஜூலை 5-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

ஏற்கெனவே இடைக்கால பட்ஜெட் நடந்து முடிந்துள்ள நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு 17 வது மக்களவையின் முதல் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுகிறது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img