3 - 2026

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 144 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2 - 2026இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 உலகக் கோப்பை தொடரில் நேற்று, தென் ஆப்ரிக்க அணியை தனது முதல் போட்டியில் சந்தித்தது இந்திய அணி. முதல் போட்டியிலேயே இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்று முத்திரை பதித்தது.

ரோஹித் சதம் அடித்து சாதனை படைத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் அடித்தார் ரோஹித் சர்மா. பும்ரா, சாஹலிம் அபாரப் பந்து வீச்சால் தென்னாப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

1 - 2026தோனி 17 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் இவ்வளவு ரன்களைக் கடக்கும் 2-வது விக்கெட் கீப்பர் இவரே. இதனால் நாடு முழுவதிலும் இருந்து இந்திய அணிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன், சேவாக் போன்ற மூத்த வீரர்களும் அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending