ரவிக்கை இல்லாம சேலை கட்டி… இப்போ வாங்கிக் கட்டிக் கொள்கிறார்… பிரியங்கா!

Published:

Priyanka Chopra 6 - 2026

பிளவுஸ் அணியாமல் சாரி அணிந்து போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா வாங்கிக் கட்டிக் கொள்கிறார் இணைய வாசிகளிடம்

சர்வதேச அளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா! பாலிவுட் ஹாலிவுட் என சினிமாக்களில் பிரபலமாகியிருக்கும் பிரியங்கா சோப்ரா அவ்வப்போது ஏதாவது செய்து சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வார்!

இவர் சர்வதேச அளவில் பிரபலமாக இருப்பதால் வெளிநாட்டு பத்திரிகைகளில் இவரது புகைப்படங்கள் அடிக்கடி அட்டையை அலங்கரிக்கின்றன. அப்படித்தான் அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த போஸ் சர்ச்சை ஆகியுள்ளது.

தற்போது இவர் புடவை ஒன்றை அணிந்து ஜாக்கெட் அணியாமல் ஒரு போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது! இந்த போஸைப் பார்த்த இணையதள வாசிகள் பிரியங்காவை படுபயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்

இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் மோசமான ஒரு படத்தை அவர் வெளியிட்டிருக்கிறார் இது முட்டாள் தனமானது என்று கொந்தளித்துள்ளனர்!

பெண்கள் மிகவும் அதிகமாகவே பிரியங்காவை திட்டி தீர்த்துள்ளனர். பிரியங்காவுக்கு சிலர் ஆதரவாக கமெண்ட் கொடுத்திருந்தாலும், அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்பட பக்கத்தில் தங்கள் பங்கிற்கு பிரியங்காவை கலாய்த்திருக்கிறார்கள் பெண்கள்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img