ஆமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அத்வானியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியைக் காணவில்லை என்று தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததற்குப் போட்டியாக தற்போது, அத்வானி குறித்து ஒட்டப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. இந்நிலையில் காந்திநகர் தொகுதியில் தங்கள் எம்.பி அத்வானியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்,‘கடந்த சில ஆண்டுகளாக அத்வானியைக் காணவில்லை தொகுதி மக்களாகிய நாங்கள் அவரிடம் தொகுதியின் பிரச்னைகள் குறித்துத் தெரிவிக்க விரும்புகிறோம். காந்திநகரில் அவரை யாராவது பார்த்தால் தெரிவிக்கவும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில், இவண் என ஆம் ஆத்மி கட்சி பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த போஸ்டர்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
அத்வானியைக் காணவில்லை: காந்திநகரில் பரபரப்பு போஸ்டர்கள்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari