AGRI MINESTER CENTERL 3 - 2026

மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வேளாண் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளர்களை சேர்க்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

இதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்துக்கான தொகையை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த முடியும் என அறிவுறுத்தினார்.

அதன்படி அடுத்த 100 நாட்களில் 1 கோடி விவசாயிகளுக்கு இந்த கடன் அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக கிராமங்கள் தோறும் பிரசாரம் மேற்கொண்டு விவசாயிகளிடம் இந்த அட்டை குறித்த பயன்பாடுகளை எடுத்துரைக்குமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மந்திரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending