வெற்றிக்கு ஆசி அளித்த ஸ்வரூபானந்தாவுக்கு சந்திரசேகர ராவின் ‘காஸ்ட்லி’ கைமாறு!

Published:

csr swarupananda1 - 2026

ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.12 கோடி….! ஆனால் சாரதா பீடத்திற்கு ஒரு ரூபாய்க்கே அளித்திருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ சாரதா பீடம் என்றால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எவ்வளவு அதீத அன்பு என்பதை சொல்லத் தேவையில்லை. தெலங்கானா தேர்தலுக்கு முன்பு சொரூபானந்த சரஸ்வதி சுவாமி தலைமையில் ராஜ ஷ்யாமளா யாகம் நடைபெற்றது. எல்லாம் கேசிஆர்., மீண்டும் முதல்வராக வர வேண்டுமென்ற ஆசிகளுடன் தான்!

தற்போது அதற்கு கைமாறாக, சாரதா பீடத்திற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது தெலங்கானா அரசு! 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஒரு ரூபாய்க்கு அளித்துள்ளது மாநில அரசு! சாரதா பீடத்தின் கோரிக்கையை செவிமடுத்த கேசிஆர் தீர்மானம் நிறைவேற்றி அளித்திருக்கிறார்.

ஹைதராபாதில் தம் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துவதற்காக நிலம் தேவை என்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீசாரதா பீடம் மாநில முதல்வரிடம் விண்ணப்பித்தது. அதனை ஏற்றுக்கொண்ட தெலங்கானா அரசு இரண்டு ஏக்கர் 34 சென்ட் நிலத்தை சாரதா பீடத்திற்கு அளித்துள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

ரங்காரெட்டி மாவட்டம் கண்டிப்பேட் மங்கலம் கோக்காபேட்டை கிராமத்தில் நிலத்தை ஒதுக்கி அரசு சனிக்கிழமை அரசு உத்தரவு வெளியிட்டது. இதற்கு பெயரளவில் விலை ஒரு ரூபாய் என்று நிர்ணயித்தது. ஆனால் இதன் மதிப்பு ஒரு ஏக்கர் ரூ.12 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று  கூறுகிறார்கள்.

csr swarupananda - 2026கோகாபேட்டை கிராம சர்வே எண் 240 இல் நிலத்தை ஒதுக்கி அரசு உத்தரவு, எம் எஸ் நம்பர் 71ஐ தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது. அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி சாரதா பீடத்தின் தலைமையில் வேத பாடசாலை, வேத கோஷ முழக்கம், கோவில், சம்ஸ்கிருத பாடசாலை, மாணவர்களுக்கு தங்குமிடம், சமூக நல அரங்கம் இவை அமைப்பதற்காக தமக்கு நிலம் ஒதுக்கித் தரும்படி ஸ்ரீ சாரதா பீடம் தர்மாதிகாரி ஜி. காமேஸ்வர சர்மா 2015, 2018லும் தொடர்ந்து, இந்த மாதம் 22ம் தேதியும் அரசிடம் விண்ணப்பம் மேல் விண்ணப்பமாக அளித்தார்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த கேசிஆர் ராவ் அரசு, முதன்மைச் செயலரிடம் இருந்து முதல்வருக்கு அனுப்பப் பட்ட பரிந்துரையை ஏற்று,  இரண்டு ஏக்கர் நிலத்தை அளிக்க கே.சி.ஆர். ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

கோகாபேட்டை கிராமத்தில் சர்வே நம்பர் 240ல் 316.04 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. தற்போது ஹைதராபாத் முனிசிபல் டெவலப்மெண்ட் அதாரிடி வசம் உள்ளது அந்த இடம். அதே லே அவுட்டில் காலியாக இருந்த 2.34 ஏக்கரை சாரதா பீடத்திற்கு அளிப்பதற்காக ஹெச்எம்டிஏ விடமிருந்து அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

swarupananda csr - 2026முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சாரதா பீடத்தின் மீதும் பீடாதிபதி சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மீதும் விசுவாசம் மிக அதிகம். இரண்டாவது முறை தாம் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதற்கு சுவாமிகளின் ஆசிகளும் பீடத்து மக்களின் ஆதரவும் இருந்ததாக கேசிஆர் நம்புகிறார்.

கடந்த வாரம் விஜயவாடாவில் சாரதா பீட உத்தராதிகாரி பொறுப்பை ஏற்ற விழாவில் கலந்து கொண்டு சொரூபானந்த சுவாமியின் ஆசிகளைப் பெற்றார் கேசிஆர். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த கேபினட் கூட்டத்தில் சாரதா பீடத்திற்கு தெலங்கானாவில் நிலம் ஒதுக்குவதாக முடிவெடுத்தனர்.

சொரூபானந்த சரஸ்வதிக்கு அளித்தது போல், தெலங்கானா திரைப்பட இயக்குனர் என்.ஷங்கருக்கு ஸ்டூடியோ கட்டுவதற்காக மோகிள்ள என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலம் கொடுப்பதாகவும் கேபினட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img