ஆஸ்திரேலிய பிரதமர் ஆர்வமாய் எடுத்துப் போட்ட செல்ஃபி..! அதுவும் இந்தியில்..! ஹை… கித்னா அச்சா ஹை!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Modi scott - 2026

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசன் பிரதமர் மோடியுடன் ஆர்வமாக செல்பி எடுத்து அந்தப் படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அவர் எடுத்த படத்துடன்,“மோடி… எவ்வளவு சிறப்பாக இருக்கு” என்றும் கேட்டு பதிவிட்டுள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று துவங்கியது. 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மீண்டும் சந்தித்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே இன்று நடைபெறும் சந்திப்பு உலக அளவில் முக்கியத்தும் பெறுகிறது. இரு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பின் போது சுமூக உடன்பாடு ஏற்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்த செல்ஃபியை வெளியிட்டு, ஹிந்தியில் கித்னா அச்சா ஹை… என்று அட எவ்ளோ நல்லா இருக்கு என்று கேட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.