மும்பை கனமழை: ஓடுபாதையை விட்டு வழுக்கிச் சென்று விபத்தில் சிக்கிய விமானம்!

Published:

mumbai flight3 - 2026 மும்பை விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு வழுக்கிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு வந்த பயணிகள் விமானம் கனமழையில் தரையிறங்கிய போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மும்பை விமான நிலையம் தகவல் வெளியிட்டது.

மும்பை விமான நிலையத்தில் நேற்று இரவு 11.45 மணி அளவில் போயிங் 737-800 விமானம் விமான ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று நின்றது.

mumbai flight2 - 2026 இது மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை என்பதால், அதன் பின்னர் விமானங்கள் இறங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இதை அடுத்து பிரதான ஓடுபாதை மூடப் பட்டது. இதனால் அடுத்துள்ள இரண்டாவது ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. ஆனாலும் அதில் கால தாமதம் ஏற்பட்டது.

ஜெய்ப்பூர் மும்பை இடையிலான ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 6237 விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த போது, இந்த விபத்து ஏற்பட்டது என்றும், அனைத்து பயணிகளும் நலமாக இருப்பதாகவும், யாருக்கும் எந்தக் காயமும் இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அடுத்துள்ள பெங்களூரு, ஆமதாபாத் நகரங்களுக்கு மாற்றி விடப் பட்டன. உள்நாட்டு விமானங்கள் பத்துக்கும் மேற்பட்டவை ரத்தாயின.

மும்பையில் இருந்தான தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை விமானங்களும் ரத்தாயின.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

mumbai flight1 - 2026

Related articles

Recent articles

spot_img