உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று… பட்டியலில் முதலிடம் பெறுவது யார்?!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

indiaVssl - 2026

உலகக் கோப்பை தொடரில் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இன்னொரு போட்டியில் ஆஸ்திரேலிய தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிகளில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெறும் பட்சத்தில் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்கும்!

இந்திய அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ரத்தானது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து இந்திய அணி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து, 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.


இந்திய அணி இன்று கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியில், மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது. இன்று காலை மழைக்கு அதிகபட்சம் 27 சதவீத வாய்ப்பு உள்ளதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். இருப்பினும் போட்டியின் போது மழைக்கான வாய்ப்பு இல்லை என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.