தலைகீழாக கவிழ்ந்த பள்ளி பேருந்து ! அதிஷ்டவசமாய் தப்பிய சிறுவனும் ஆசிரியையும்

இந்தியா பொது தகவல்கள்

school bus - 2026எதிர்பாராத சாலை விபத்தினால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்தில் அதிர்ஷடவசமாக ஒரு மாணவனும்,ஒரு ஆசிரியையும் உயிர் தப்பியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தனியார் பள்ளி பேருந்து நேற்று சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நடுவே இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக  கவிழ்ந்தது.

பேருந்தில் பயணம் செய்த ஆசிரியையும், சிறுவனும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். இதன் காட்சிகள் பேருந்தின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.