உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

supremecourtjudgement tamil - 2026

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், அதன் இணையதளத்தில் தமிழிலும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

தற்போது முதல் முயற்சியாக, இரு தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் தமிழில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இந்தத் தீர்ப்புகள், சம்பந்தப் பட்டவர்கள் அவரவர் மொழியில் படித்துப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே என்றும், இதில் உள்ள வார்த்தைகள் சட்ட ரீதியான நுணுக்கங்களுடன் மேற்கோள் காட்டி வாதிடவோ அல்லது வேறு எந்த பயன்பாட்டுக்குமோ உரியது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

supremecourtjudgement tamil1 - 2026முன்னதாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து பிராந்திய மொழிகளிலும் அதன் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது இந்த முயற்சிக்கு இப்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தன் டிவிட்டர் பக்கத்தில், தனது மகிழ்ச்சியை இவ்வாறு தெரிவித்திருந்தார்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படும் என்ற உத்தரவை அடுத்து இன்று இரு தீர்ப்புகள் உச்ச நீதிமன்ற வலைதளத்தில் தமிழில் தீர்ப்பு பதிவேற்றம் செய்யப்பட்டது. இது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாநில மொழிகளில் தீர்ர்புகள் வழங்கப்பட வேண்டும் என முன் முயற்சி எடுத்த நமது ஜனதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் எமது நன்றி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.