வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் செயலிழப்பு! பெங்களூரில் அதிர்ச்சி!

bengaluru bomb - 2026

பெங்களூரில் பரபரப்பான ராமநகரம் பகுதியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் முன்னதாகவே கண்டறியப் பட்டு, செயலிழக்கச் செய்யப் பட்டன.

பெங்களூரு அருகே கைதான வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமநகரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது!

பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹபிபுர் ரஹ்மான் (28 வயது) பெங்களூரில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டான்.

பின்னர் பெங்களூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டான். கூடுதல் விசாரணைக்குப் பின்னர் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து பயங்கரவாதி ஹபிபுர் ரஹ்மானை என்.ஐ.ஏ., அமைப்பினர் மேலும் விசாரித்து வந்தனர்!

அந்த விசாரணையின் போது பெங்களூர் அருகே உள்ள ராமநகரத்தில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருப்பதாக அவன் தெரிவித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற விசாரணை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் !

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

bangalore bomb - 2026அதன் பேரில் பயங்கரவாதி ஹபிபுர் ரஹ்மானையும் நேற்று காலை ராமநகரம் அழைத்துச் சென்றனர். அங்கே உளவுத் துறை தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

பயங்கரவாதி சுட்டிக்காட்டிய மேம்பாலத்தின் கீழே இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை செயலிழக்க வைக்கப்பட்டன. இதன் மூலம் பயங்கரவாத சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories